வினோத சிவலிங்கங்கள்

Friday, December 08, 2006

Vinotha Siva Lingams


வினோத சிவலிங்கங்களும் ....

Monday, December 04, 2006

Vinotha Siva Lingams

Tuesday, October 17, 2006

வினோத சிவலிங்கங்கள்

வினோத சிவலிங்கங்களும் சிவாலயங்களும்

1001 சிறுலிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் இராமநாதபுரம் மாவட்டம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படும் திருஉத்ரகோசமங்கையில் உள்ளது.

திருவாடானை அருகில் திருவெற்றியூர் அ.மி வன்மீகநாதர் பாகம்பிரியாள் ஆலயத்தில் இருக்கும் லிங்கத்தில் சக்தியின் வடிவமும் சேர்ந்து இருப்பதால் அன்னை பாகம்பிரியாள் என்று அழைக்கப்பட்டாள். இங்கு சுவாமி அம்மன் இருவருக்கும் இருஅர்ச்சனைகள் சேர்ந்தே செய்கிறர்கள்.

குடந்தை பட்டீஸ்வரம் அருகில் திருச்சக்திமுற்றம் என்ற தலத்து இறைவன் அ.மி சக்திவனேஸ்வரரை அன்னை ஸபியநாயகி தழுவிய கோலததில் இருப்பதால் இறவைர் தவழகுழைந்த நாதர்(சக்திதழுவிய நாதர்) என்றும் தஞ்சை-பாபநாசம் அருகில் இருக்கும் திருநல்லுர் ஈசன் தினமும் ஐந்துமுறை நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறர். இத்தலத்தில் இறைவன் திருநாவுக்கரசருக்கு தன் திருவடிசுடீட்டியதால் இங்குவரும் பக்தர்களுக்கு சிவன்திருவடி பதித்த சடாரி சுடீட்டபடுகிறது.

மயிலாடுதுறை அருகில் திருநீடுர் என்ற திருத்தலத்தில் உறையும் இறைவன் சோமநாதரை நண்டு வனங்கியதால் லிங்கம் நண்டு வளையுடன் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் திருப்புன்கூர் மற்றும் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) தலங்களில் லிங்கத்திற்கு பதிலாக செப்புக்குவளை கவசமாக சாற்றப்பட்டுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புனவயல் என்ற தலத்து லிங்கத்தைவிட ஆவுடையார் பெரியது. ஆகவே லிங்கத்திற்கு 3முழம் வேட்டியும் ஆவுடையாருக்கு 30முழம் வேட்டியும் சுற்றப்படுகிறது. மூன்று முழமும் ஒருசுற்று முப்பது முழமும் ஒருசுற்று என்பது வழக்கு மொழியில் அழைக்கப்படுகிறது.




திருக்கருகாவூர் அ.மி கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவன நாதர் ஆலயத்து மூலவர் சுயம்புதிருமேனி மீது முல்லைக்கொடிபடர்ந்து இருந்ததாக வரலாறு. இன்றும் முல்லையின் வடு உள்ளதால் இறைவன் முல்லைவன நாதர் என்று அழைக்கப்படுகிறகுர்.

குடந்தை-காரைக்கால் மார்க்கத்தில் இருக்கும் திருநீலக்குடி மூலவர் அ.மி.நீலகண்டேஸ்வரருக்கு எண்ணெய் அபிஙூமூகம் சிறப்பு. எவ்வளவு எண்ணெய் அபிஙூமூகம் செய்தாலும் பாணத்திற்குள்ளே இழுத்துக்கொள்ளும். இங்கு அம்பாளே ஈசனுக்கு அபிஙூமூகம் செய்வதாக வரலாறு.

திருக்கானப்பேர் என்றழைக்கப்படும் காளையார் கோவிலில் மூலவருக்கு மூன்று சந்நிதிகள் - காளீஸர் சோமேசர் மற்றும் சொக்கேசர் ஆகியோர்

காஞசிபுரம் அ.மி.திருமேற்றளி நாதர் ஆலயத்தில் இரண்டு சந்நிதிகள்
ஒன்று ஓதஉருகீசர் மற்றெகுன்று திருமேற்றளிஈசர்-விமூ;னு ுபத்திலிருந்து சம்பந்தர் பாடலால் இலிங்க ுபம் பெற்ற தலம்.

காஞ்சி-பெருங்காட்ூர் அருகில் இருக்கும் திருப்பனங்காட்ூர் தலத்தில் பனங்காட்டீஸர் மற்றும் கிருபாநாதேசுவரர் என்ற இரண்டு சுவாமி சந்நிதிகளும் அமுதவல்லி-கிருபாநாயகி என்ற இரண்டு அம்மன் சந்நிதிகளும் உள்ளன.

திருக்காளத்தி இறைவன் அ.மி காளாத்தீஸ்வரர் சந்நிதியில் எஞிசியும் தீபம் காற்றினால் மோதப்பட்டதுபோல் எக்காலமும் அசைந்து கொண்டிருக்கும்.

சிவசர்மன் என்ற பாலபக்தனின் பூஷைக்காகவேண்டி தம்திருமுடி வளைத்து ஏற்றுக்கொண்டதால் திருவிஞிசிஞ்சிபுரத்து இறைவன் அ.மி.மார்க்பந்தீஸ்வரர் திருமேனி சற்று வளைந்துகாணப்படுகிறது.

திருப்பனந்தாள் இலிங்கத்திருமேனி தாடகை என்னும் பக்தையின் அன்பை வெளிப்படுத்த சாய்ந்த திருமேனியானது. மன்னர் யானயைக்கொண்டு அதனை நிமிர்தமுடியாமல்போகவேஇ குங்கிலியக்கலய நாயனார் அன்பின் மிகுதியால் மலர்மாலையால் சாய்ந்திருந்த திருமேனியை தன் கழுத்தையும் பிணித்து நிமிரச்செய்தார்

திருபாம்புரம் அ.மி.வண்டுசேர்குழலி சமேத பாம்புரநாதர் திருமேனியில் ஞாயிறு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாகபாம்புகள் நாகவழிபாட்டை மேற்கொள்வதாகவும் அந்தநேரத்தில் மல்லிகை தாழம்பூ நறுமனம் வீசுவதாக செவிவழி செய்திகள் கூறபட்டாலும்
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 21ம் நாள் இறைவன் திருமேனிமீது பாம்பு தனது சட்டையை அணிவித்துஇருப்பதை பலர் கண்ணடீற்றுள்ளனர்.

மயிலாடுதுறை அருகில் திருவாளப்புத்துர் என்ற தலத்தில் திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மாணிக்கவணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

திருவாடானை தலத்தில் சுகுசியன் நீலஇரத்தின லிங்கத்தை ஸதாபித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்திணேஸ்வரர் ஆனார்.

திருஇடைச்சரம் - திருவடிச்சுடீலம் மூலவர் இடைச்சுர நாதர் மரகத (பச்சைக்கல்) லிங்கத்திலானாவர்.

Friday, September 22, 2006

விலங்குகள் பூசித்த சிவத்தலங்கள்
எறும்பு : திருவெறும்பூர் (திருச்சி அருகில்)
ஈ: திருஈக்கோய்மலை, முசிறி அருகில்
பாம்பு: திருநாகேஸ்வரம் த[pருபாம்புரம்
அனில், குரங்கு, காகம்: குரங்கனிமுட்டம்
மயில்: மயிலாடுதுறை - மைலாப்பூர்
நாரை: திருநாரையூர்
புலி: திருப்பாதிhpபுலியூர், பெரும்புலியூர்
கழுதை: கரவீரம்
கழுகு: திருக்கழுக்குன்றம்
பசு: திருக்கோகர்ணம்
யானை: திருவாணைக்காவல்
சிலந்தி: திருக்காளத்தி
ஆமை: திருக்கச்சு{ர்
கருங்குருவி: திருவலிதாயம்
நண்டு: திருந்து தேவன்குடி

தேவர்கள் பூஷித்த சிவத்தலங்கள்
இந்திரன்: மதுரை- கண்ணார்கோயில்
அக்கினி: திருக்கொள்ளிக்காடு
யமன்: (Sri Vanjiyam)வாஞ்சியம் - நன்னிலம்
பிரம்மா: பிரம்மபுரம் - சீர்காழி
ஷடாயு: வைத்தீஸ்வரன்கோவில்
காமதேனு: ஆவூர், சிக்கல்
பைரவர்: வடுகூர்
பன்முக லிங்கங்கள்
ஏகமுகலிங்கம் நிருதி லங்கம் -பதவி ஐஸ்வர்யம்
அளிக்கவல்லது - திருவண்ணாமலை
துவிமுக லிங்கம் இருமுக லிங்கம் - தியாக குனம் கோவில்களில் இல்லை
திhpமுக லிங்கம் திhpயம்பகம் லிங்கம் - தத்புருமூமுகம்
ஆண்மை - அகோரமுகம் கோபவடிவம்
வடக்கில் வாமதேவமுகம் - பெண் சாயல்
திருவக்கரை-சந்திரமௌலீஸ்வரர் மற்றும்
ஈரோடு - மகிமாலீஸ்வரர்; ஆலயங்களில்
திhpயம்பகம் லிங்கம் கானப்படுகிறது
சதுர்முக லிங்கம் நேபாளம் பசுபதி[நாதர் ஆலயம் நான்முகக்
கோவில் - திருவாணைக்கா. திருவண்ணாமலை
காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயங்;களிலும்
பஞ்சமுக லிங்கம் நான்கு திசைகளலில் ஒவ்வொரு தலையும்
ஐந்தாவதாக கிழக்கே ஒரு தலையும் கொண்டது
விhpஞ்சிபுரம் மார்க்கபந்திஸ்வரர் கோவிலில்
உள்ளது.
ஆறுமுக(சண்முக) லிங்கம் நான்கு திசைகளலில் ஒவ்வொரு தலையும்
ஐந்தாவதாக உச்சியிலும் ஆறhவது பாதாளத்தை
நோக்கியும் உள்ளது.
அஸ்டோத்திர லிங்கம் 108 லிங்கத்; திருமேனிகள் கொண்டது
அருனாச்சலேஸ்வரர் கோவில[ல் உள்ளது
சோடமூச லிங்கம் 16 பட்டைகளுடன் கொண்டது - தென்
பொன்பரப்பியில் உள்ள சொர்ணஸ்வரர்
கோவிலில் உள்ளது.
சகஸ்வர லிங்கம் 1001 லிங்க உருவங்கள் கொண்டது
அருனாச்சலேஸ்வரர் கோவில[ல் உள்ளது
திருஉத்ரகோசமங்கை ஆலயத்திலும் உள்ளது